சூரியக்குமார் யாதவை அணியில் இருந்து விலகியது அநியாயம்- ஹர்ஷா போக்ளே.!
By : Pravin Kumar
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி தற்போது அகமதாபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முதலில் நடைப்பெற்ற 2 டி-20 போட்டிகளில் ஆளுக்கு ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலை வகிக்கும் நிலையில் இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றியை நோக்கி இந்த போட்டியில் விளையாடி வருகின்றனர். மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.
அதன்படி தற்போது முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று கோலி கூறியபடி துவக்க வீரர்களாக அவர்கள் இருவருமே களமிறங்கினார்கள்.இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித்தின் வருகையால் கடந்த போட்டியின் போது அறிமுகமான இந்திய அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். தனது முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்ற சூர்யகுமார் யாதவ் பேட்டிங் இறங்காமலேயே கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதனால்இந்த போட்டியிலாவது அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தனது திறமையை நிரூபிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் திடீரென இன்று டாசில் வெற்றி பெற்ற கோலி ரோஹித் அணிக்குள் வருவதால் சூரியகுமார் அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இந்நிலையில் கடந்த போட்டியில் அறிமுகமாகியும் விளையாடமலேயே வெளியேறிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரபல கிரிக்கெட் நிபுணர் மற்றும் தொகுப்பாளருமான ஹர்ஷா போக்ளே தனது பக்கத்தில் : சூர்யகுமார் யாதவை பார்ப்பதில் மிகவும் கடினமாக இருக்கிறது. ரோஹித் அணிக்கு திரும்பும் வேளையில் அவர் வெளியேற்றப்பட்டார் என்பது கடினமான ஒன்று. அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு நான் ஆவலாக காத்திருக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.