Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்.!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  22 March 2021 5:45 AM GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று வீதமான தொடர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்திய நிலையில் அடுத்ததாக ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடினர். இந்த தொடரையும் இந்திய அணி போராடி 3-2 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 23ம் தேதி இந்தியாவில் உள்ள புனே மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் நேற்று இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இங்கிலாந்து அணியில் சில மாற்றங்களுடன் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈயோன்மோர்கன் (சி), மொயீன் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டன், மாட் பார்கின்சன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, மார்க் வூட்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News