இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் சுருண்டது இங்கிலாந்து படை.!
By : Pravin Kumar
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ரோஹித் சர்மா 28 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி நிலைத்து விளையாடினார்.
மறுமுனையில் ஷிகார் தவண் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதத்தை கடந்து தொடர்ந்து விளையாட வீராட் கோலி 56 ரன்னில் அவுட் ஆகினார் பின்னர் வந்த ஷ்ரேயஸ் ஐயர் 6 ரன்னில் அவுட் ஆக ஷிகார் தவண் 2 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 98 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்து ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் மற்றும் க்ருளாள் பாண்டிய இருவரும் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த இந்திய அணி 317 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜெசன் ராய் மற்றும் பேஸ்ரோ இருவரும் சிறப்பான தொடக்கத்தை இங்கிலாந்து அணிக்கு கொடுத்தனர்.
130 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்த 116 ரன்களில் ஆல் அவுட் ஆக அதிர்ச்சி கொடுத்தது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினார். இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்திய அணி.