சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தார் தோனி.!
By : Pravin Kumar
2021 ஆம் ஆண்டு நடைபெறும் 14 வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். இதற்கான அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.இன்னும் 24 நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை தான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெறியேறியது.
மூன்றுமுறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த முறை தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக ராபின் உத்தப்பா, மோயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகியோரை ஏலத்தில் எடுத்து இருக்கிறது. மேலும் கடந்த சீசனில் விளையாடாத சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் மீண்டும் அணியில் இணைந்து இருக்கிறார்.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த ஆண்டுக்கான புதிய ஜெர்ஸியை தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஜெர்ஸியில் இரண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. சிஎஸ்கேவின் புதிய ஜெர்ஸியின் இரண்டு தோள்பட்டை பகுதியில் ராணுவ சின்னம் இருக்கிறது. இதையடுத்து, ஜெர்ஸியின் முன்புற நடுவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்தாண்டு ஸ்பான்சரான மின்த்ரா நிறுவனத்தின் லோகோ இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த புதிய ஜோசிய கண்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.