இந்திய சுழல்பந்து வீச்சாளர் குறிவைத்து தான் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினேன்-பென் ஸ்டோக்ஸ்.!
By : Pravin Kumar
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று நடந்த போட்டியில் தோல்வியைத் தழுவி 1-1 என சமநிலையில் உள்ளது.இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடக்க உள்ளது, இதில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணி ஒருநாள் தொடரில் கோப்பையை வெல்லும் என்ற நிலையில் இரு அணிகளும் தங்களை தீவிரமாக தயார் செய்து கொண்டுள்ளது. நாளைய போட்டி பார்ப்பதற்கு மிகவும் கோலாகலமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
நேற்றுநடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருந்தனர். இதில் கே எல் ராகுல் 102, ரிஷப் பண்ட் 77 மற்றும் விராட் கோலி 66 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதன்பிறகு 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் (55), பேர்ஸ்டோ(124) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (99) ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு காரணம். இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என தொடரை சமநிலையை செய்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிக சிறப்பாக செயல்பட்டு 52 பந்துகளுக்கு 99 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதில் இவர் 4 போர்களும்,10 சிக்ஸ்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் கே பாண்டியாவின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார், இவர் முதல் 11 பந்துகளில் தனது 49 ரன்களை குவித்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, டிரெஸ்ஸிங் ரூமில் நான், என்ன நடந்தாலும் நான் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்துக்கொள்கிறேன் எவ்வளவு பெரிய ரிஸ்க் ஆக இருந்தாலும் அதை நான் செய்கிறேன் என்று நான்தான் திட்டமிட்டேன்.அதன்படி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம் என்று தெரிவித்தார்.அதேபோன்று இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தனது கடமையை சிறப்பாக செய்தார்கள், மேலும் ஸ்டிரைக் ரேட் அடிப்படையில் இவர்கள் இருவரும் என்னுடைய பார்வையில் உலகின் தலைசிறந்த துவக்க வீரர்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் நாங்கள் சேசிங்கில் இவ்வாறான நிலைமையை சந்திப்போம் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.பின் இந்தியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டோம்,அதை மனதில் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் செல்வதற்கான முயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.