சிஎஸ்கே அணியில் இந்த புதிய சாதனையை படைக்க வேண்டும் ராபின் உத்தப்பா.!
By : Pravin Kumar
இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து தொடரில் பங்குபெற்ற ஐபிஎல் வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது ஐபிஎல் அணிகள் உடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் 10 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.இதனால் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் முமும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சொந்தம் கிடையாது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பேட்ஸ்மன்களை குறிவைத்து ஏலத்தை நடத்தியது. முதலில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் மூலம் அணியில் சேர்த்தது.இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, புஜாரா, பகத் வர்மா போன்ற வீரர்களை சென்னை அணி எடுத்துள்ளது.தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்த ராபின் உத்தப்பாவிடம் இந்தாண்டு எந்த அணியை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு உத்தப்பா நான் நடப்பு சாம்பியன் மும்பை அணியை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.மேலும், இந்தாண்டு உங்களது தனிப்பட்ட ஆசை என்ன கேட்டதற்கு சிஎஸ்கே அணி மீண்டு வந்து கோப்பை வெல்ல வேண்டும். பின் நான் இந்த ஐபிஎல்லில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது நோக்கத்திற்கும், ஆசைகளுக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெறிவித்து வருதின்றனர்.