ஆர்சிபி அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பதிப்பு.!
By : Pravin Kumar
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற ஐபிஎல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய முழுவதும் கொரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்ட படி நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் மைதானத்தில் ஏப்ரல் 10 முதல் 24 ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா பதிப்பு உறுதியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு நிர்வாகிக்கு கொரோனா பதிப்பு உறுதியானது.
மேலும் டெல்லி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் வீரர்களுக்கும் கொரோனா பதிப்பு உறுதியானது. இந்நிலையில் மேலும் ஒரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருக்கு கொரோனா பதிப்பு உறுதியாகியுள்ளது. பெங்களூர் அணியின் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா உறுதியாகி உள்ளது.