ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 11 பதக்கங்களை வென்ற இந்தியா!
By : Sushmitha
ஆசிய விளையாட்டு போட்டியின் 11 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சீனாவில் ஹாங்சோவ் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியான சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில் இந்தியா இதுவரை இரண்டு வெண்கல பதக்கத்தை துடுப்பு படகு போட்டியிலும், துப்பாக்கி சுடுதல் பிரிவிலும் பெற்றுள்ளது. மேலும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்க பதக்கத்தையும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவிற்கான மற்றொரு தங்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதோடு இந்தியாவைச் சேர்ந்த தோமர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஒரு வெண்கலத்தையும் 25 மீட்டர் பயர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி மற்றொரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா தற்பொழுது இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலம் என 11 பதக்கங்களை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனக்கு உரிமையாக்கி உள்ளது. இதன் மூலம் பதக்கங்களுக்கான பட்டியலில் தற்போது இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது ஆனால் சீனா தற்போது 20 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை தனது உரிமையாக்கி பதக்க பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
Source - ABP Nadu