ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி.. இந்தியா 111 பதக்கங்களை வென்று சாதனை..
By : Bharathi Latha
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தன்னுடைய அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்திய வீராங்கனைகள் இந்த ஒரு போட்டிக்காக முழுமையாக தன்னை தயார் படுத்திக் கொண்டு போட்டியில் 100% தன்னுடைய பலத்தை காட்டுகிறார்கள். இதன் காரணமாக இந்தியா தற்பொழுது இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மெடல்களை வென்று இருக்கிறது. இதற்கு இந்திய தரப்பு மக்கள் பல்வேறு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக வீரர்களின் இந்த ஒரு முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் அசாதாரண செயல்திறனுக்கு பிரதமர் பாராட்டு. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 111 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், உத்வேகத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது, “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் அபாரமான செயல்திறன், நாட்டைச் சிலிர்க்க வைத்துள்ளது! 111 பதக்கங்களை வென்று சாதனை படைத்த நமது விளையாட்டு வீரர்களை நான் பாராட்டுகிறேன். இந்தச் சாதனை, நமது விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகத்திற்கு ஒரு சான்றாகும்" என்று கூறினார்.
Input & Image courtesy: News