Begin typing your search above and press return to search.
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? கங்குலி பதில் இதோ !
By : Dhivakar
ஒமிக்ரான் வைரஸ் பிரெச்சனையை ஏற்படுத்தும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி பதில் :
தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு கிரிக்கெட் வாரியம் எப்போதுமே முதல் முன்னுரிமையை கொடுக்கும். இதற்காக நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.
Image : Cricket Addictor
Next Story