சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த விராட் கோலி.. இவ்வளவு சாதனைகளா..
By : Bharathi Latha
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். விராட் கோலி தொடர்ச்சியாக இவர் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். தொடர்ச்சியாக ரன் குவிப்பால் ஏராளமான சாதனைகளை விராட் கோலி நிகழ்த்தி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த விராட் கோலி நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட் தன்னுடைய 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார்.
இவருக்கு கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புயினரும் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக விராட் கோலி ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். விராட் கோலி. இதுவரை 116 டெஸ்ட் போட்டிகளில் விளையாட 29 சதம், 8676 ரன் மற்றும் 275 ஒரு நாள் போட்டிகளிலும் 46 சதத்துடன் 12,897 215- 20 ஓவர் போட்டிகளில் ஒரு சதம் 37 அரை சதத்துடன் நாலாயிரத்தி எட்டு ரன்கள் என ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2582 ரன்களை எடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் விராட் கோலி 15 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் சுவாரசியமான பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பையும் பெற்று இருக்கிறார். இதுவரை இவர் 83 மைதானங்களில் விளையாடி இருக்கிறார் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் அறிமுக ஆட்டம் ஆட்டங்களில் சதம் அரை சதம் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது.
Input & Image courtesy: News