கடைசி மூன்று டி-20 போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு.!
By : Pravin Kumar
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு டி-20 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள மூன்று டி-20 போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
முதல் இரண்டு டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணியை வீழ்த்தியது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி தனது சிறப்பான பேட்டிங்க் மூலம் இங்கிலாந்து அணியை பலிவாங்கியது. இந்நிலையில் முதல் இரண்டு டி-20 போட்டிகளிலும் 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடைசி மூன்று டி-20 போட்டிகளுக்கு பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அறிவித்தது படி அடுத்து நடைபெற்ற உள்ள மூன்று ஒரரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பார்வையாளரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.