Kathir News
Begin typing your search above and press return to search.

ஐந்தாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா அணி.!

ஐந்தாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  21 March 2021 1:00 AM GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு டி-20 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்த போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.


இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர்‌. இந்த தொடரிலேயே சிறந்த தொடக்கத்தை இந்த ஜோடி இந்திய அணிக்கு கொடுத்தது. ரோஹித் சர்மா தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அரைசதம் வீளாசிய ரோஹித் சர்மா 64 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த சூரியக்குமார் யாதவ் வந்த வேகத்தில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு களை சிதறடிக்க 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகிறார். நிலைத்து விளையாடிய கோலி அரைசதம் வீளாசி கடைசி வரை களத்தில் இருந்து 80 ரன்கள் வீளாசினார்.


ஹர்டிக் பாண்டிய 37 ரன்கள் அடிக்க இந்திய அணி ‌20 ஓவர்கள் முடிவில் 224 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜெசன் ராய் டக்அவுட் ஆக பின்னர் வந்த டேவிட் மாலன் மற்றும் பட்லர் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடிக்க 130 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி பின்னர் பட்லர் 52 ரன்னில் அவுட் ஆக மாலன் 68 ரன்களில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று சாதனை வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகனாக புவனேவர்குமார் மற்றும் தொடர் நாயகனாக வீராட் கோலி தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News