பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி.!
By : Pravin Kumar
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றது. முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரர்கள் கப்தில் மற்றும் ஆலேன் களம் இறங்கிய நிலையில் ஆலேன் டக் அவுட் ஆக பின்னர் வந்த கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கப்தில் 35 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து யங் கான்வே உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கான்வே 92 குவிக்க யங்க் 53 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த பிலிப்ஸ் 24 ரன்கள் அடித்த நிலையில் நியூசிலாந்து அணி 210 ரன்கள் குவித்தது.
அதை தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணியில் தொடக்கத்திலேயே தடுமாறிய நிலையில் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. பங்களாதேஷ் அணியில் அபிப் ஹசைன் 45 அடித்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 144/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.