ஆசிய தடகள போட்டி... 27 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடம்...
By : Bharathi Latha
தற்போது 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி வெகு விமர்சியாக தொடங்கி இருந்தது. இந்த போட்டி நேற்று நடந்த நிறைவு பெற்றது. மேலும் கடைசி நாள் முடிவில் இந்தியா 5 வெள்ளி மற்றும் ஐந்து வெண்கல பதக்கங்களை வென்று வீரர்கள் இந்தியாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்து இருந்தார்கள்.
குறிப்பாக பெண்களுக்கான 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் வீராங்கனை 15 நிமிடங்களில் 52.35 வினாடிகளில் இரண்டாவதாக வந்து வழி பதக்கத்தை வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருந்தார். மேலும் எட்டு பேர் கொண்ட ஆண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தின் போது இந்திய வீராங்கனை கிசான் குமார் என்பவர் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்று இருக்கிறார்.
மேலும் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை 23.11 வினாடிகளில் ஒடி பந்தய தூரத்தை கடந்து தற்போது வெள்ளி பதக்கத்தை தனக்கு சொந்தமாக இருக்கிறார். அதுமட்டுமில்லாத தொடர் ஓட்ட போட்டி மற்றும் ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் இந்தியா வெள்ளி பதக்கத்தை தட்டி சென்று இருக்கிறது. இதன் காரணமாக இந்த விழாவில் ஆறு தங்கம், 12 வெள்ளிகள், 9 வெண்கல பதக்கங்கள் என 27 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது.
Input & Image courtesy: News