கோலாகலமாக தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டி.. 45 நாடுகள் பங்கேற்பு...
By : Bharathi Latha
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக உலக நாடுகள் அதிக அளவில் பங்கேற்கும் போட்டிகளில் ஒன்றாக ஆசிய விளையாட்டு போட்டி காணப்படுகிறது. 1951 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு இந்த போட்டி மிகவும் உலக நாடுகளுக்கு மத்தியில் பிரசித்தி பெற்றது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நேற்று தொடங்கியது. சீன நகரில் பல்வேறு கோலாகலமான ஏற்பாடுகளுடன் இந்த போட்டி நேற்று அங்கு துவங்கியிருக்கிறது.
இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தென்கொரியா, வடகொரியா, பங்களாதேஷும், பூட்டான், கஜகஸ்தான், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த 15 நாடுகளை சேர்ந்த வீரர்கள் சுமார் 12500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக பங்கேற்று இருக்கிறார்கள். இந்திய நேரப்படி இந்த போட்டி நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த போட்டியை சீன அதிபர் தொடங்கி வைத்திருக்கிறார்.
ஆசிய விளையாட்டுக்கான தீபம் பல்வேறு நாடுகளிடையே பயணித்து கடைசியாக தொடக்க விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்கு வீரர், வீராங்கனைகள் எடுத்து வந்தார்கள். மேலும் தொடக்க விழாவின் போது முக்கிய அம்சமான பல்வேறு போட்டிகளை பங்கேற்க்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த வீர வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் மைதானத்தில் அணிவகுத்து நடந்தார்கள். இந்த அணி வகுப்பில் இந்திய அணி மிகவும் பிரமாண்டமாக கலந்து கொண்டது.
Input & Image courtesy: News