தொடர்ந்து 9வது முறையாக முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்தது மும்பை அணி.!
By : Pravin Kumar
ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிரிஸ் லின் 49 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், இஷான் கிஷன் 28 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணி சார்பில் அசத்தலாக பந்துவீசிய ஹர்சல் பட்டேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இதனையடுத்து 160 ரன்கள் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக வந்த ராஜ்ட் படிக்கர் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் பின் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி – மேக்ஸ்வெல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பொறுமையாக ரன் சேர்த்தது.
விராட்கோலி 33 ரன்களிலும், மேக்ஸ்வெல் 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்த பிறகு அணியின் ஒட்டுமொத்த பாராமும் டிவில்லியர்ஸிடம் சென்றது. டிவில்லியர்ஸும் எப்பொழுதும் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்துவிட்டு கடைசி ஓவரின் 4வது பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 2 பந்துகள் 2 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை பெங்களூர் அணிக்கு ஏற்படவே, பந்துவீச்சாளர்கள் ஒருவழியாக தட்டுதடுமாறி 2 ரன்கள் சேர்த்து பெங்களூர் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்தனர்.இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த தொடரை துவங்கியுள்ள பெங்களூர் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூர் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான டிவில்லியர்ஸிற்கும் அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.