எக்ஸ் இன் புதிய விதிமுறை.. BCCI-க்கு வந்த பிரச்சினை.. சுதந்திர தினத்தில் இப்படி ஒரு சோதனையா..
By : Bharathi Latha
இந்தியாவில் அதிகமாக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் விளையாட்டு வாரியமாக இந்தியாவின் பிசிசிஐ விளங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் அதிகமாக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியங்களில் ஒன்றாக இந்தியாவின் BCCI விளங்கி வருகிறது. இப்படி இருக்கும் பொழுது இந்தியாவின் BCCIயின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் அதாவது தற்பொழுது பெயர் மாற்றம் செய்ய பட்டிருக்கிற எக்ஸின் டிக் மார்க் நீக்கப்பட்டு இருக்கிறது. ஏன் இப்படி டிக் மார்க் அதிகாரப்பூர்வமாக இருக்கும் BCCI-கே நீக்கப்பட்டது? என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
எக்ஸின் ஓனராக இருக்கும் எலான் மஸ்கின் ஒரு வினோத சட்டத்தால் தற்போது பிரச்சினையை சந்தித்து வருகிறது. அதன்படி டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தற்போது மாற்றி அதற்கு எக்ஸ் என பெயர் வைத்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு மருந்து நிறுவனம் பெயரில் போலி கணக்கை உருவாக்கி ப்ளூ டிக் வாங்கி விட்டனர். இதன் காரணமாக உண்மையிலேயே பெயரைக் கொண்டிருக்கும், அந்த நிறுவனம் தன்னுடைய பங்குகளின் மதிப்பை குறைய தொடங்கிய காரணத்தின் காரணமாக அதிகாரப்பூர்வமான கணக்குகளை கொண்டு இருப்போர் தங்களுடைய ப்ரொபைல் மற்றும் பெயரையோ மாற்றக்கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களை தங்களுடைய சமூக வலைத்தள கணக்கில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக வைக்க சொல்லி இருந்தார்.
இதை அடுத்து BCCI தங்களுடைய புரொஃபைல் பிக்சரை தேசியக் கொடியாக மாற்றினார்கள். இதன் காரணமாக தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் புதிய விதிப்படி பிசிசிஐ தன்னுடைய ப்ளூ டிக்கை இழந்து இருக்கிறது. தேசிய கொடியை வைத்ததற்கு எப்படி ப்ளூ டிக் நீக்கப்படலாம் என ரசிகர்களும் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள்.
Input & Image courtesy: News