Kathir News
Begin typing your search above and press return to search.

டென்னிஸ் விளையாட்டை கண்டு களித்த CSK கேப்டன் தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

டென்னிஸ் விளையாட்டை கண்டு களித்த CSK கேப்டன் தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Sep 2023 2:00 AM GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அது மட்டும் கிடையாது இந்த போட்டியை விளையாடும் பொழுது அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் பின் தீவிர ஓய்வில் இருந்த தோனி, அண்மையில் முழுமையாக குணமடைந்தார்.


அடுத்த IPL தொடரில் பங்கேற்க முழு ஃபிட்னஸை எட்டுவதற்காக ஜிம்மிலும் அதிக நேரம் செலவிட்டார். இந்த நிலையில் திடீரென நண்பர்களுடன் தோனி விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றார். இது புரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இந்த நிலையில் அமெரிக்காவில் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான டென்னிஸ் தொடர், ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அங்கு மிகவும் பிரசித்தி பெற்றது.


இதன் காலிறுதி தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார். டென்னிஸ் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அல்காரஸ் ஆடிய போட்டியை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் தனது நண்பர்களுடன் கண்டு களித்துள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News