Kathir News
Begin typing your search above and press return to search.

ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்த தோனியின் வீடியோ.. மீண்டும் IPLலில் கேப்டன் ஆவாரா?

ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்த தோனியின் வீடியோ.. மீண்டும் IPLலில் கேப்டன் ஆவாரா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Aug 2023 4:49 AM GMT

நடந்து முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. அது மட்டும் கிடையாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு சாதனைகளை இந்த ஒரு ஐபிஎல் தொடரில் படைத்து இருந்தது குறிப்பாக, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.


இந்த சாதனைகளுக்கு பின்னால் சென்னை அணி கேப்டன் தோனியும், பயிற்சியாளர் முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். ஆனால் கேப்டன் தோனி அவர்களின் கடைசி ஆட்டம் இதுதான் என்றும் இதற்குப் பிறகு அவர் ஓய்வு எடுக்க இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வெளி வந்தது. போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தோனி அவர்கள் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் காயத்தில் இருந்து விடுபட்டுள்ள தோனி, மீண்டும் தனது உடற்பயிற்சியை தொடங்கியுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியில் வரும் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி அவர்களை பார்க்க முடியும் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News