Kathir News
Begin typing your search above and press return to search.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியா VS பாகிஸ்தான் போட்டியில் திடீர் மாற்றம்..

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியா VS பாகிஸ்தான் போட்டியில் திடீர் மாற்றம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Aug 2023 5:14 AM GMT

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது குறிப்பாக 13 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் சுமார் பத்து நகரங்களில் இதுபோன்று நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி அன்று வெளியாகியது. அக்டோபர் ஐந்தாம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கிறது.


ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குறிப்பிட்ட தேதி ஆட்டங்களை மாற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மொத்தம் ஒன்பது ஆட்டங்களில் தேதி மற்றும் நேரங்கள் மாற்ற செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள ஸ்டேடியத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.


அன்றைய தினம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் தொடங்குவதால் முக்கியமான இந்த போட்டிகள் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதன் காரணமாக அக்டோபர் 14ஆம் தேதி அதே மைதானத்தில் அந்த போட்டியில் நடத்த இருப்பதாகவும் இதனால் பாகிஸ்தான் அணிகளுக்கு போதுமான இடைவெளி கிடைக்கும் என்பதற்காக இலங்கைக்கு எதிரான அந்த அணியின் ஆட்டம் அக்டோபர் 12ம் தேதிக்கு பதிலாக பத்தாம் தேதிக்கு செல்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News