Kathir News
Begin typing your search above and press return to search.

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

பன்னிரண்டு அணிகள் பங்கேற்கும் புரோ கபடி வீக் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Oct 2022 4:59 AM GMT

12 அணிகளுக்கு இடையேயான ப்ரோ கபடி நீக்க போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ப்ரோ கபடி லீக் 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இந்த போட்டி கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் ரசிகர்களை இல்லாமல் நடத்தப்பட்டது. இதில் கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ஒன்பதாவது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டிஷவாரா உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.


வருகின்ற 26 ஆம் தேதி வரை இங்கு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அடுத்த இரண்டு சுற்று லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் உள்ள நகரங்களில் நடைபெறுகிறது. நவம்பர் எட்டாம் தேதி வரை நடைபெறும் லீக் போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. எனவே பிளே ஆப் சுற்று இறுதிப்போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கபடி திருவிழாவில் நடப்பு சாம்பியன் டெல்லி, மூன்று முறை சாம்பியன் ஆன பாட்னா பைரேட்ஸ், முன்னாள் சாம்பியன் ஆன பெங்களூரு புல்ஸ், வாரியர்ஸ் ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.


கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த வீரர்கள் இடத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவை இல்லாத வீரர்களை கழட்டி விட்டுவிட்டு தேவையான வீரர்களை விலைக்கு வாங்குவதுடன் அணியை வலுவாக தயார் படுத்தி மோதலில் குதிக்க உள்ளனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை தளாய் இரண்டு முறை மோத வேண்டும். லிக் சுற்று முடிவில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றி அடையும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்குள் அடி எடுத்து வைக்கும். மூன்று முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேறுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் போட்டியில் நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து இருப்பதும் வீரர்களுக்கு புதிய வேகத்தை அளிக்கும் என்பது சந்தேகம் இல்லை.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News