15 வீரர்களில் ஒருவனாக இருப்பதை பெருமை.. மனம் திறந்த இந்திய கிரிக்கெட் வீரர்..
By : Bharathi Latha
தற்பொழுது இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் அற்புதமான தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய அணியில் மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். களம் காணுவதற்கு வெறும் 11 வீரர்கள் தான் பல்வேறு ஆட்டங்களில் களம் காண்கிறார்கள். குறிப்பாக இதுவரை இந்தியா 5 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த போட்டியில் கடைசி 5வது ஆட்டத்தில் தான் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி களம் இறக்கப்பட்டு இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "போட்டிகளில் களம் இறக்கப் படவில்லை என்றாலும், எப்பொழுதும் இந்திய அணியில் விளையாடுவது போன்ற ஒரு உணர்வுடன் தான் நான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இமாச்சல் பிரதேசத்தில் நடந்த உலக கோப்பைகளை போட்டியில் நியூசிலாந்து அணிகள் போட்டியில் முதல் நான்கு போட்டியில் விளையாடாத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தற்பொழுது அந்த ஒரு போட்டியில் சேர்க்கப்பட்டார். அதில் அவர் ஐந்து விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்தியா 11 அணியில் இடம் கிடைக்காதது கடினமானது. அதே நேரம் நமது அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் களத்திற்கு வழியே இருப்பதற்காக நம் வருத்தப்பட வேண்டியதில்லை.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விளையாட்டு. இதில் 15 வீரர்களில் ஒருவனாக இருப்பது பெரிய விஷயம். 11 பேரில் ஒருவராக இடம்பெற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில் நான்கு பேர் மாற்று வீரர்களாகத்தான் இருப்பார். இன்று நான் அணியில் இல்லாமல் இருக்கலாம், நாளை இடம் பெறலாம். நாளை மறுநாள் மறுபடி ஆடாமல் போகலாம், அது அப்படியே தொடங்கும். நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy:News