Kathir News
Begin typing your search above and press return to search.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. வெளிவந்த அறிவிப்பு..

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. வெளிவந்த அறிவிப்பு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 July 2023 2:27 AM GMT

ஒன்பதாவது 20 ஒவ்வொரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் நேற்று பள்ளி வந்தது. குறிப்பாக 20 அணிகளை பங்கேற்க இந்த போட்டியில் முடிவு செய்து இருப்பதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக இணைந்து நடத்தும் அமெரிக்காவில் எந்தெந்த மைதானங்களில் போட்டியை நடத்தலாம் என்பது குறித்து தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கிறது.


இதற்கு தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் அட்டவணைகளும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இதில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. கடந்த இரண்டு உலக கோப்பைகளை ஒப்பிடும் பொழுது இந்தப் போட்டி அட்டவணை முறை சற்று வேறு வகையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அதிக உலக நாடுகள் பங்கேற்கும் ஒரு போட்டியாகவும் இது கருதப்படும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News