ஆஸ்திரேலியாக்கு எதிரான டி-20 கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்கள் தேர்வு!
ஆஸ்திரேலியாக்கு எதிரான டி-20 கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்கள் தேர்வு!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி முன் கூடியே ஆஸ்திரேலியா சென்று அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பிறகே தொடரில் பங்கேற்க உள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் நவம்பர் 27-ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி -20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பி.சி.சி.ஐ.
இந்நிலையில் மூன்று டி-20 தொடருக்கான இந்திய அணியில் அதிக அளவில் ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் இரண்டு முக்கிய இளம் சுழல்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கிரவர்த்தி இருவரும் இடம் பிடித்துள்ளனர். அதே போல் மயங்க் அகர்வால் டி-20 தொடரிலும் இடம் பிடித்துள்ளனர். சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே போன்ற வீரர்களும் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தனர்.
1) கோலி 2) தவான் 3) அகர்வால் 4) கே.எல்.ராகுல் 5) ஷ்ரேயாஸ் ஐயர் 6) மனீஷ் பாண்டே 7) ஹார்டிக் பாண்டியா 8) சஞ்சு சாம்சன் 9) ஜடேஜா 10) சுந்தர் 11) சாஹல் 12) பும்ரா 13) ஷமி 14) சைனி 15) தீபக் சாகர் 16) வருண் சக்ரவர்த்தி.
