34 ஆவது தேசிய விளையாட்டு போட்டி.. கோவாவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
By : Bharathi Latha
37 வது தேசிய விளையாட்டு போட்டி கோவா நகரில் நேற்று முன்தினம் வெகு விமர்சியாக கோலாகலமாக தொடங்கியது பன்னீடாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 37 வது தேசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது. மாலை நடந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "விளையாட்டு வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு தேவையான நிதி உதவி வழங்கப்படும் திட்டங்களில் நாங்கள் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு செலவிடப்படும் தொகை மூன்று மடங்கு உயர்த்தப் பட்டிருக்கிறது.
நமது நாட்டில் விளையாட்டு திறமைக்கு பஞ்சம் கிடையாது நம் நாடு பல விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி வருகிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கோவா முதல் மந்திரி மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
நவம்பர் 9ஆம் தேதி வரை கோவாவில் உள்ள ஐந்து நகரங்களில் இந்த ஒரு போட்டி நடைபெறுகிறது தடகளும். நீச்சல், கூடைப்பந்து, கபடி, குத்துச் சண்டை, வாள்வீச்சு உள்ளிட்ட 43 வகையான விளையாட்டுகள் இதில் நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 10,000 மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். தொடக்க நாளில் நடந்த வாழ்வு போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற சாதனையாளரான தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்று இருக்கிறார்.
Input & Image courtesy: News