இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்! ஆசிய ஜூடோ ஜீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் அபார சாதனை!
By : Thangavelu
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. போட்டியின் முதல் நாளான இன்று (ஜூலை 20) இந்தியா 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
அதாவது போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
#NEWSUPDATE || ஜூடோ- இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் | #IndiaWins | #Gold | #Silver | #Bronze | #AsianJudoJuniorChampionship | https://t.co/CKGwVurgWm pic.twitter.com/NMY76OulEu
— Polimer News (@polimernews) July 20, 2022
ஆசிய ஜூடோ ஜூனியர் போட்டியில் மொத்தம் 15 நாடுகளில் இருந்து 91 வீரர்கள் மற்றும் 72 வீராங்கனைகள் உள்பட 163 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் நாளான இன்று 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்தியாவை சேர்ந்த தோய் சனம் தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும், மற்றவர்கள் ஒரு வெள்ளி, 3 வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். முதல் நாளிலேயே 6 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கணைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Source, Image Courtesy: Polimer