செஸ் ஒலிம்பியாட் போட்டி: களத்தில் நிறைமாத கர்ப்பிணி!
By : Thangavelu
செஸ் ஒலிபியாட் போட்டிகள் நாளை (ஜூலை 28) சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 187 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அதன்படி இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது.
மொத்தம் 30 வீரர், வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்க இருக்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி உள்ளிட்ட வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி 31, நிரைமாத கர்ப்பிணியாக உள்ளார். தற்போது அவர் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க இருக்கின்றார். உலக தரவரிசையில் ஹரிகா 11வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் தன்னுடைய 9 மற்றும் 10வது வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள நிலையில், மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் அவர் உள்ளார். இருந்தபோதிலும் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவரின் வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Source, Image Courtesy: Maalaimalar