Begin typing your search above and press return to search.
சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் - நடிகர் மாதவன் மகன் அசத்தல்!

By :
சர்வதேச அளவிலான நீச்சல் போட்டி டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அதாவது பந்தய தூரத்தை சுமார் 8:17.28 வினாடிகளில் கடந்து வேதாந்த் சாதனை படைத்தார். இந்த வீடியோவை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், உங்களது வாழ்த்துகளுடனும், கடவுளின் ஆசிர்வாதத்தினாலும் இந்த வெற்றி தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் வேதாந்தின் பயிற்சியாளர் உட்பட அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.
Source, Image Courtesy: Dinamalar
Next Story