Kathir News
Begin typing your search above and press return to search.

6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது!

6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது!

ThangaveluBy : Thangavelu

  |  21 July 2022 1:07 PM GMT

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் இருக்கிறது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதன்படி இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே நாட்டிற்கு செல்கிறது. அந்த நாட்டுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22ம் தேதியில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடைபெற உள்ளது. மேலும், 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News