Kathir News
Begin typing your search above and press return to search.

அஜிங்கா ரஹானேவை பற்றி வீரேந்திர சேவாக் கூறிய முக்கியமான விசயம்.!

அஜிங்கா ரஹானேவை பற்றி வீரேந்திர சேவாக் கூறிய முக்கியமான விசயம்.!

அஜிங்கா ரஹானேவை பற்றி வீரேந்திர சேவாக் கூறிய முக்கியமான விசயம்.!
X

Pravin  PravinBy : Pravin Pravin

  |  5 Nov 2020 11:03 PM IST


அஜிங்கா ராஹானே 2012ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வருகின்றார். அதற்கு முன்னரே ஐபிஎல் தொடரிலும் பல முறை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளார். இருந்தாலும் தற்பொழுது இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அவரை இந்திய அணியின் தலைமை அதிகாரிகள் டெஸ்ட் பிளையராகவே பார்க்கின்றனர். இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4000 மேல் ரன்களை குவித்துள்ளார்.


ஐபிஎல் தொடரிலும் இரண்டு முறை சதம் விளாசி உள்ளார். ஆனால் டி 20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்குவது இல்லை. இந்நிலையில் நேற்று முந்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரகானே டெல்லி அணி நன்றாக விளையாட உத்வேகமாக இருந்தார். 46 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார்.

ரஹானே உடைய இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கூறியதாவது : ரஹானேவை டி20 வீரராக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. பவுண்டரிகள் அடிக்க தவருகிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் ரகானே போன்ற ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நிலைத்து நின்று நங்கூரமாக ஆடக் கூடியவர். அவர் ஆடும் போது எதிர் திசையில் உள்ள வீரர் அடித்து ஆட வேண்டும் அப்போதுதான் அவருக்கு பக்கபலமாக இருக்கும்.


ரகானே தொடர்ந்து சொதப்பலாக ஆடிக் கொண்டிருந்த போதும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வாய்ப்பு கொடுத்து கொண்டே இருந்தால் அதனை சரியாக பயன்படுத்தி விட்டால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி நேற்று வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது என்று கூறியுள்ளார் விரேந்தர் சேவாக்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News