Kathir News
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளர் தரவரிசையில் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2023 12:49 AM GMT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டு இருக்கிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் முதல் இடத்திற்கு தற்போது முன்னேறி இருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர் நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக தற்போது டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலியா கேப்டன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர்களை கடந்த வாரம் பின்னுக்கு தள்ளி தற்போது அவர் முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சாளர் கடந்த நான்கு வருடங்களாக தரவரிசையில் முதலிடம் பிடிப்பது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு தொடர்களை எளிதாக இந்தியா வென்று இருந்தாலும் மூன்றாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் பல்வேறு ஆட்டங்களில் தவறவிட்ட அணிகள் கடைசி நேரத்தில் வெற்றியை கொண்டாடும், அந்த வகையில் மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் அதிக அதிகம் செலுத்து இருக்கிறது. குறிப்பாக ஆடுகளம் மிகவும் சாதகமாக இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News