இந்திய வீரர்களை மோசமாக நடத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உண்மையை போட்டுடைத்த அஸ்வின்!
இந்திய வீரர்களை மோசமாக நடத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உண்மையை போட்டுடைத்த அஸ்வின்!
By : Pravin kumar
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்ததால் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0 என இழந்து விடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.
ஆனால் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் டெஸ்டில் பெற்ற அதிரடி வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி விமர்சனம் செய்த அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதரிடம் கலந்துரையாடி இருக்கிறார். அப்போது இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது அஸ்வின் ஸ்ரீதரிடம் ஆஸ்திரேலிய நிர்வாகம் தங்களை மெல்போர்ன் டெஸ்ட் வெற்றிக்குப்பின் எவ்வாறு நடத்தினர் என்பதை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவை அஸ்வின் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து அஸ்வின் பேசுகையில் “ நாங்கள் அடிலெய்ட் மைதானத்தில் 36 ரன்களில் சுருண்டு விட்டோம். இதனால் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தோம். இதன் பிறகு ஆஸ்திரேலிய நிறுவனத்தின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டது. 3-வது டெஸ்ட் போட்டிக்காக சிட்னி மைதானத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஒரே லிப்டில் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர்.
நாங்கள் எங்களது ஓய்வு அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கூறினர். ஆஸ்திரேலிய வீரர்களும் நாங்களும் ஒரே மாதிரியான பயோ பபுளில் தான் இருந்தோம். ஆனால் எங்களுக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது அதிர்ச்சியாக இருந்தது” என்று பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் கூறியிருக்கிறார் அஸ்வின்