ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் - ஜெய்ஷா அதிரடி!
ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் பொதுவாக இடத்திற்கு மாற்ற வேண்டும் ICC செயலாளர் ஜெய்ஷா அதிரடி அறிவிப்பு.
By : Bharathi Latha
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அடிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியது. ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. முதலில் இந்த போட்டி இலங்கையில் நடத்துவதாக இருந்தது. இலங்கையில் உள்நாட்டு பொருளாதார பிரச்சினை மற்றும் போராட்டங்கள் காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐம்பதாவது ஓவர் வடிவில் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல போவதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து மும்பையில் நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய வாரிய கூட்டத்தில் ஆண்டு பொதுவா விதமாக மாறப்பட்டது. பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய கவுன்சில் செயலாளரும் ஆசிய கவுன்சிலிங் தலைவருமான ஜெய்ஷா கூறுகையில், "2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும். இதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக சொல்கிறேன். ஏனெனில் நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது.
அதே போல் அவர்கள் இங்கு வர முடியாத ஆசிய விளையாட்டுப் போட்டி பொதுவான இடத்தில் நடப்பது என்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் பொதுவான இடங்களில் நடத்தப்பட்டுள்ளது" என்றார். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது சில கடினமான முடிவுகளை எடுக்க தயாராகி வருகிறது. இந்திய அணி ஆசிரிய போட்டிக்காக பாகிஸ்தான் வர மறுத்தால் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலக நேரிடும். இது போல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக்குவது குறித்தும் பேசும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.
Input & Image courtesy: News