Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா!

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் கட்டாய வெற்றி நெருக்கடிகளில் இந்தியா என்று இலங்கை அணியுடன் மோதுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Sep 2022 3:01 AM GMT

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள நாலு நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளம் தேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்படி இதில் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி 181 ரன்கள் குவித்த போதிலும் பாகிஸ்தான் ஒரு பந்து வீதம் வைத்து இலக்கை அடைந்து விட்டது.


இந்த தோல்வியினால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும். இந்திய அணி என்ற இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இந்நிலையில் இந்தியா இன்று நடக்கும் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கின்றது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் மேற்கொண்டார்கள். முந்தைய ஆட்டத்தில் விராட் கோலி அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தார். தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் லோகேஷ் ராகுல் ஓரளவுக்கு நன்றாக ஆடினார். லிக் சுற்றியும் சேர்த்து இதுவரை மூன்று ஆட்டத்தில் ஆடி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவருக்கு பதிலாக இன்றைய மோதலில் அக்சர் பட்டியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.


அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கை மீண்டும் களம் இறக்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலித்து உள்ளது. லீக் சுற்றில் தட்டு தடுமாறி இலங்கை அணி சூப்பர் ஃபோர் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானி வீழ்த்தி விடகாத்திரமாக நம்பிக்கையுடன் உள்ளது. இந்த அணி பேட்டிங்கில் கேப்டன் ஷனகா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளார்கள். இதை உத்வேகத்துடன் இந்தியாவிற்கு எதிராகவும் வரிந்து கட்டுவதில் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எனவே பெரும்பாலும் வெற்றி பெரும் திறமையை காட்டிலும் டாஸ்க்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு இடையே கட்டாயம் வெற்றி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News