Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் - இந்தியா வெற்றிக்கு இனி வாய்ப்பு இருக்கிறதா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை இடம் தோற்ற இந்தியாவிற்கு இனி வெற்றி வாய்ப்பு இருக்கிறதா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் - இந்தியா வெற்றிக்கு இனி வாய்ப்பு இருக்கிறதா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Sep 2022 2:16 AM GMT

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையுடனும் தோல்வியை தழுவிய இந்தியாவிற்கு இறுதிப் போட்டி வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரவி விஷ்ணுவுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். டாஸ்க் ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் இந்தியாவில் பேட் செய்ய பணிந்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலும் இந்தியாவின் முதல் ஆட்டத்தை தொடங்கினார்கள்.


இம்முறை ஒரு ஓவர் கூட தாக்கு பிடிக்காத விராட் கோலியின் ஆட்டத்தை பொறுத்தவரையில் ரசிகர்களுக்கு பெருமை மாற்றமாகவே அமைந்தது. சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் இழந்த இடம் தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு வாய்ப்பு முழுமையாக முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. சில பல ஆட்டங்களில் முடிவு சாதகமாக அமைந்தால் ஒரு சில அதிர்ஷ்டம் அடிக்கலாம். அதாவது பாகிஸ்தான் அணி என்று இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடம் தோற்க வேண்டும். இந்திய அணியின் தனது கடைசி லீக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.


இப்படி எல்லாம் சரியாக நடந்தால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றி, இரண்டு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும் அப்பொழுது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தேர்வாகும். அதே சமயம் சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவுக்கு இறுதி சுற்று வாய்ப்பு சற்று குறைவாகத்தான் இருக்கின்றது. ஆட்டத்தின் வேகத்தை பொறுத்து இது மாறுபடலாம்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News