Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: விராட் கோலி சதம்!

ஆசிய கிரிக்கெட் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்ததால் இந்தியா ஆறுதல் வெற்றி.

ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: விராட் கோலி சதம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Sep 2022 4:51 AM GMT

ஆசிய கிரிக்கெட் கோப்பை 15வது தொடர் ஆனது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றது. இதில் சூப்பர் ஃபோர் சுற்றில் அடுத்தடுத்து இரு தோல்விகளை தழுவிய நடப்பு சாம்பியன் அணியான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு போவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் எதிர்கொண்டது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய கேப்டன் ரோகித், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சாகல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.


அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், தீபக் சாகர், அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா இல்லாததால் கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றார். டாஸ்க் ஜெயித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி தயக்கம் இன்றி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை எடுத்து லோகேஷன் ராகுல் விராட் கோலியின் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக களம் புகுந்தனர். இந்த பொன்னான வாழ்வே சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கோலி ரன்களை பொழிந்தார். அணியின் ஸ்கோர் 119 ஆக உயர்ந்த போது ராகுல் 62 ஆவது ரன்னில் ஆட்டம் இழந்தார்.


அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் முதல் பந்தில் சிக்சர் அடித்து விட்டு அடுத்த பந்தில் போல்ட் ஆகிப் போனார். அதன் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷிப் களம் நுழைந்தார். கடைசி ஆட்டத்தில் கோலியின் ருத்ரதாண்டவத்தில் ஆப்கானிஸ்தான் பவுலர்கள் நிலைகுலைந்து போனார்கள். 19 ஓவரில் சிக்ஸர், ஒரு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தனது சதத்தை கோலி நிறைவு செய்து, ரசிகர்களை பரவசப்படுத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்காத அவரது இயக்கமும் தெரிந்தது. தொடர்ந்து கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலக்கத்தில் ஆழ்த்தி விட்டார். மேலும் நடப்பு தொடக்கத்தில் முதல் அணியாக இந்தியா 200 ரங்களை கடந்தது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News