Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் சதம் வீளாசி அசத்திய அஸ்வின்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் சதம் வீளாசி அசத்திய அஸ்வின்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் சதம் வீளாசி அசத்திய அஸ்வின்!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  15 Feb 2021 5:48 PM GMT

சென்னையில் கடந்த 13 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 339 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதில் குறிப்பாக ரோஹித் சர்மா 161 ரன்கள் அடித்திருந்தார். இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி வெறும் 134 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதில் இந்தியாவின் அஸ்வின் 43 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஏற்கெனவேநடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் டோம் சிப்லே, லாரண்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார்.

இதுவரை விளையாடியுள்ள 76 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 29 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஸ்வின்.இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 391 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பதும் அதில் 200 விக்கெட்டுகள் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்தத் தொடருக்குள்ளாகவே 400 விக்கெட்டுகள் எடுத்து மற்றுமொரு புதிய சாதனையை அஸ்வின் படைப்பார்இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் பாக்கி உள்ள நிலையில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ள அஸ்வின் இந்தத் தொடருக்குள்ளாகவே 400 விக்கெட்டுகள் எடுத்து மற்றுமொரு புதிய சாதனையைப் படைப்பார் என்பது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்துஅணிக்குஎதிரான இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 148 பந்துகளை சந்தித்து 106 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளை 3 ஆவது முறையாக நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார் அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News