Kathir News
Begin typing your search above and press return to search.

எத்தனை கோடி கொடுத்தாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டேன் ஆஸி வீரர்?

எத்தனை கோடி கொடுத்தாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டேன் ஆஸி வீரர்?

எத்தனை கோடி கொடுத்தாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டேன் ஆஸி வீரர்?
X

Pravin kumarBy : Pravin kumar

  |  8 Feb 2021 7:58 AM GMT

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும் மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.இது போக இன்னும் அதிகமான வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக தங்களை பதிவு செய்து இருக்கின்றனர். இந்த தகவலை பிசிசிஐ தற்போது வெளியிட்டு இருக்கிறது. பிசிசிஐ வெளியிட்ட தகவலின்படி இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

இதில் இந்திய வீரர்கள் 814 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 283 பேரும் பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வெஸ்ட் இண்டீஸிலிருந்து 56 வீரர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 42 வீரர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 38 வீரர்கள் பதிவு செய்திருக்கின்றனர். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவில்லை. இந்த ஐபிஎல் ஏலத்தில் 19 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், டாம் பென்டன் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதுபோக சூதாட்டம் காரணமாக தடை செய்யப்பட்ட ஶ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், இந்திய டெஸ்ட் வீரர்கள் புஜாரா மற்றும் விஹாரி ஆகயோரும் இந்த ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர். இதனால் 14வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News