டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி விழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
By : Thangavelu
20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி விழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலில் டாஸ் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் பின்னர் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டனர் பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் தொடக்க ஆட்டத்தில் நல்ல ரன்களை குவித்தனர். இதில் 39 ரன்களில் பாபர் ஆசம் விக்கெட்டானார். அவரை தொடர்ந்து ஸ்மான் ரிஸ்வானுடன் இணைந்து அதிகமான ரன்களை சேர்த்தனர். இரண்டு பேரும் அரைசதம் அடித்து 20 ஓவர் முடிவில் 176 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச்சின் முதல் ஓவரிலேயே விக்கெட் ஆனார். இதனை தொடர்ந்து வார்னரும், மிட்செல் மார்ஸும் சேர்ந்து அணியின் சரிவிலிருந்து மீட்டனர். மார்ஸ் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். 49 ரன்களுடன் வார்னரும் வெளியேறினார். இந்த சூழலில் இணைந்த ஸ்டாய்னிஸ் மற்றும் வேட் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி 9 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேத்யூ வேட் ஹாட்ரிக் சிஸ்கர்களை விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
Source, Image Courtesy: Puthiyathalimurai