Kathir News
Begin typing your search above and press return to search.

டி20 போட்டியில் இலங்கையை வென்ற ஆஸ்திரேலியா!

டி20 போட்டியில் இலங்கையை வென்ற ஆஸ்திரேலியா!

ThangaveluBy : Thangavelu

  |  8 Jun 2022 5:50 AM GMT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இரண்டு அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக கூறியது. இதனிடையே பேட்டிங் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா 38 ரன்னும், பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.

இதனை தொடர்ந்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடத்தொடங்கியது. தொடக்கத்தில் களம் இறங்கிய ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அசத்தினர். அந்த அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற உடன் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என்கின்ற புள்ளியில் முன்னிலை வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News