இந்திய அணியிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் விளக்கம்!
இந்திய அணியிடம் இருந்து ஆஸ்திரேலியா நிறைய கற்க வேண்டி இருக்கிறது என்று மைக்கேல் கிளார்க் விளக்கி இருக்கிறார்.
By : Bharathi Latha
இந்தியாவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா அணி மூன்று நாளுக்குள் தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது. டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டிங் இரண்டாவது இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் 6 பேர் முட்டி போட்டு பந்தி அடிக்க முயன்று ஆட்டம் இழந்து இருக்கிறார்கள். இந்த ஒரு நிகழ்வு பெறும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கான காரணம் என்ன? என்பதை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் பட்டியலிட்டு இருக்கிறார்.
குறிப்பாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணியின் தடுமாற்றம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை ஏனெனில் இந்திய சுற்றுப் பயணத்திற்கு முன்பாக ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா விளையாடவில்லை. இதுதான் மிகப்பெரிய தவறு, இங்கு உள்ள சூழ்நிலையில் பழக்கப் படுத்திக் கொள்ள முடிந்தது ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆவது ஆடி இருக்க வேண்டும். இரண்டாவது டெஸ்டில் வீரர்களின் சாட்டுகள் சரியில்லை. நீங்கள் உங்களது இன்னிசை தொடங்கும் பொழுது பந்தை ஸ்லீப் ஷாட் வகையில் அடிப்பதற்கு உகந்த சூழல் இருக்காது.
அதை போல் களம் இருக்க உடனே களம் இறங்கிய உடனே சுழற் பந்துவீச்சில் ஒருபோதும் ரிவர்ஸ் சாட்டுகள் அடிக்க கூடாது. நம்மிடம் எத்தனை உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் உடன் இருக்கிறார்கள் என்பது முக்கியமானது அல்ல. நீங்கள் எதற்காக விளையாடியிருக்கிறீர்கள், ஒரு பேட்ஸ்மேனாக ஒரு இன்னிக்சில் ஆடும் பொழுது எந்த வகையான ரிஸ்க் எடுத்து ஆடினால் பலன் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு விளையாட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy:Sports News