"வீராட் கோலியை வெறுக்கிறேன்" ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் அதிரடி!
"வீராட் கோலியை வெறுக்கிறேன்" ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் அதிரடி!

By : Pravin kumar
ஐ.பி.எல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி கையோடு ஆஸ்திரேலியாவிற்கு பறந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்காக மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அதிகம் செய்வார்கள். அந்த வகையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதை எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் கேப்டனாக வீராட் கோலி வந்த பிறகு இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணிக்கு சமமாக மோதும் அளவிற்கு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் "வீராட் கோலி என்றாலே வெறுப்பு தான். விராட் கோலியுடன் விளையாடும்போது வேடிக்கையான ஒன்று. அவரை நாங்கள் வெறுக்க விரும்புகிறோம். ஆனால், அவரது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறோம். அதுவும் ஒரு ரசிகராக" என்றார்.
