Kathir News
Begin typing your search above and press return to search.

மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

.

மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2022 1:29 PM GMT

12வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஹெய்ன்ஸ் 130 ரன்களும் கேப்டன் லனிங் 86 ரன்களை எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 310 ரன்களை எடுத்திருந்தது. இதன்பின்னர் 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து சறுக்கியது. முதல் ஓவரில் லாரன் வின்ஃபீல்ட் ஹில் ரன் எதுவும் எடுக்காமலேயே விக்கெட் ஆனார். அவருக்கு அடுத்து வந்தவர்கள் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறித்தது.

Source: Maalaimalar

Image Courtesy: ICC Cricket

Next Story
கதிர் தொகுப்பு
Trending News