பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் நுழைந்த ஆஸ்திரேலியா!
By : Thangavelu
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று விளையாடியது. மழை காரணமாக 45 ஓவருடன் முடிக்கப்பட்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களை எடுத்திருந்தது. இதன் பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
அதன்படி 12 ரன்கள் எடுப்பதிற்குள் முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ், அதற்கு அடுத்து 44 ரன்களுக்கு 2வது விக்கெட்டையும் பறிக்கொடுத்தது. இதில் தொடக்கத்தில் இறங்கிய டியான்ட்ரா டாட்டின் 34, ஹேலி மேத்யூஸ் 34, டெய்லர் 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். அதற்கு அடுத்து வந்த வீராங்கனை குறைந்த ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:ICC Cricket