உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரின் விசா ரத்து செய்ததற்கு நீதிமன்றம் தடை!
By : Thangavelu
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஜனவரி 17ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் நகருக்கு வந்தடைந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் மருத்துவ விதிவிலக்கு பெறுவதற்கான ஆணவங்கள் எதுவும் இல்லாமல் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு உடனடியாக ரத்து செய்துவிட்டது.
இதனால் அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தனது விசா ரத்தானதை தொடர்ந்து ஜோகோவிச் மெல்போர்ன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஜோகோவிச் வழக்கறினர் எவ்வித நோய் இல்லை என்ற ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அந்தோனி கெல்லி, ஜோகோவிச் விசாவை ரத்து செய்ததற்கு தடை விதித்தார். இதனால் அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கு எவ்வித தடையும் இல்லை என கூறப்படுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy:National Herald