பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி: கேப்டனாக மந்தனா நியமனம்!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தற்போது நடைபெற இருக்கும் பெண்கள் பிரிமியர் லீக் போட்டியின் கேப்டனாக மந்தனா நியமனம்.
By : Bharathi Latha
பெண்கள் ஐ.பி.எல் எனப்படும் முதலாவது பெண்கள் பிரீமியம் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கிருக்கும் ஐந்து அணிகளில் ஒரு அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 91 கோடிக்கு ஏலம் போனது. இந்த அணியில் இந்திய தொடக்க வீராங்கனை மந்த்னா 3.4 கோடிக்கு ஏலம் போனார்.
இந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டனாக இந்திய பேட்டர் மந்தனா நேற்று நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை அந்த அணி நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு பெங்களூர் ராயல் சேலஞ்ச் சேர்மன் மிஸ்ரா பேசுகையில், மந்தனா பெங்களூர் அணியை சிறப்பான உயரத்திற்கு அழைத்து செல்வார் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஐ.பி.எல் போட்டிக்கான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரவேற்றுப் பேசி இருக்கிறார்கள். இது பற்றி கேப்டன் கூறுகையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தலைமை தாங்குவது குறித்து விராட் கோலி ஆகியோர் அதிகம் பேசியதை பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஒரு அருமையான வாய்ப்பு வழங்கிய நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News