புதிதாக இரண்டு ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுமதி!
புதிதாக இரண்டு ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுமதி!

By : Pravin kumar
ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் எப்ரல் மற்றும் மே மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. 13வது சீசன் ஐபிஎல் தொடர் தற்பொழுது தான் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் ஐந்து மாதம் இடைவெளியில் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. இதை பிசிசிஐ ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இந்நிலையில் நேற்று பிசிசிஐயின் 89வது ஆண்டு பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடர் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் தொடர் 2021 ஆம் ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதை பிசிசிஐ இந்த கூட்டத்தின் முடிவில் உறுதி செய்துள்ளது.

ஆனால் புதிய இரண்டு அணிகளும் 2022 ஆம் ஆண்டு தான் இணைய உள்ளனர். 2021 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளதால் பொது ஏலம் நடத்த வாய்ப்பு இல்லை என கூறுப்படுகின்றது. எனவே அடுத்த ஆண்டு தான் இந்த இரு அணிகளும் இணையும் என தெரிகிறது.

இந்த இரு அணிகளும் அகமாதாபாத் மற்றும் கான்பூர் அல்லது லக்னோ வை தலைநகராக கொண்டு இருக்கும் என தெரிகின்றது. எனவே இந்த இரு அணிகளும் இணைந்த பின்னர் எட்டு ஐபிஎல் அணிகளில் இருந்து பத்து ஐபிஎல் அணிகளாக உயரும் என தெரிகின்றது.
