BCCI- க்கு வந்த புதிய சோதனை.. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரம்..
By : Bharathi Latha
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு குழு தலைவர் இல்லாமல் தான் செயல்பட்டு வருகிறது. தலைவர் இல்லாமலேயே தேர்வு குழு செயல்பட்டது. மேலும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்ற முக்கிய தொடரில் தேர்வு குழு தலைவர் இல்லாமல் தான் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இதனால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என்று பல்வேறு விமர்சனங்களும் எழுதுகிறது இந்தியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
ஆனால் அதில் தேர்வு குழு தலைவர் இல்லாததால் சரியான நபர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் போனது முக்கிய குற்றச்சாட்டாக எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஆசிய கோப்பை, உலக கோப்பை கிரிக்கெட் என அடுத்தடுத்த முக்கிய தொடர்கள் நடைபெற இருக்கிறது இதனால் புதிய தேர்வு குழு தலைவரை தேர்ந்தெடுக்க பணி முக்கியமானதாக கருதப்பட்டு உள்ளது. இந்த நிலையில் BCCI தேர்வு குழு உறுப்பினருக்கான விண்ணப்பத்தைக் கோரி விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பதவிக்கு வரும் நபர்கள் பல்வேறு நிபந்தனைகள் உடன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். எனவே பதவிக்கு வரும் நபர்கள் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக தான் இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் விண்ணப்பிக்கும் நபர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகளாகவும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்றும் BCCI தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: News