புதிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி: கங்குலிக்கு பதவி நீடிப்பு இல்லை!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By : Bharathi Latha
இந்த கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொது குழு கூட்டம் வருகின்ற 18ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் பதவியே இருக்கிறார்கள். தற்போது BCCI யின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்கோலி இருந்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் அந்த பதவியை அலங்கரித்து, மேலும் மூன்று ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பதவி நீடிப்பு தொடர்பாக கிரிக்கெட் பாரியம் விதிமுறையில் மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில் கங்குலியின் பதவி நீடிப்பு இல்லை என்று தெளிவாகி விட்டது. கடந்த ஒரு வாதமாக கிரிக்கெட் பாரிய நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கங்குலி இரண்டாவது முறையாக தலைவராக தொடர விரும்பினார். ஆனால் இதில் மற்ற நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை. கங்குலிக்கு சேர்மன் பதவியை தர முன் வந்தார். ஆனால் அது ஏற்க கங்குலி மறுத்துவிட்டார்.
இதனடையில் கங்குலிக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய முன்னாள் வீரர் ரோஜர் பின்னி யை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் வேப்பமனு தாக்கல் செய்தார். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஹீரோவாக திகழ்ந்தார். ரோஜா பின்னி அந்த உலகத் தொடரில் அவர் மொத்தம் 18 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பெங்களூருவை சேர்ந்த 67 வயதான ரோஜா பின்னி கிரிக்கெட் வாரியத்தின் 36-வது தலைவராகிய தலைவர் ஆகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகனான ஜெய்ஷா கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஆக தொடர்ந்து நீடிக்கிறார்.
Input & Image courtesy: News